tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி-க்கு மதவெறி சக்திகள் கொலை மிரட்டல் - சிபிஎம் கண்டனம்!

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆர்எஸ்எஸ்பாஜகஇந்து மக்கள் கட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற மதவெறி சக்திகள் முயல்வதைச் சுட்டிக்காட்டி மதச்சார்பற்ற சக்திகள் விழிப்போடு இருந்து மக்கள் ஒற்றுமையைப் பாதுகாப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும்மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். இதனால்ஆத்திரமடைந்துள்ள ஆர்எஸ்எஸ்பாஜகஇந்து மக்கள் கட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் உள்ளிட்டவர்கள் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தனிப்பட்ட முறையில் அவரை அவதூறு செய்து வருகின்றனர். மதவெறி சக்திகளின் இந்தச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அவருக்கு தமிழக அரசும்தமிழக காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும்கொலை மிரட்டல் விடுத்துள்ளவர்கள் மீது காவல்துறை சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

திருப்பரங்குன்றத்தைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும் பதற்றத்தை ஏற்படுத்த ஆர்எஸ்எஸ்பாஜகவினர் முயற்சி செய்கின்றனர். திண்டுக்கல் கோட்டையில் திப்புசுல்தான் ஆட்சிக் காலத்தில் அபிராமி அம்மன் கோவில் சூறையாடப்பட்டதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உண்மையில்லாத கட்டுக்கதை ஒன்றைக் கூறியுள்ளார். அம்மன் சிலையை மீண்டும் நிறுவப்போவதாகவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக அரசும்காவல்துறையும்மாவட்ட நிர்வாகமும் விழிப்போடு இருந்து சதிச்செயல்களை முறியடிக்கவும்மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.