பாத்திரத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க அனைத்துத் தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூர், அக்.10- பாத்திரப் பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என அனைத்து பாத்திர தொழிலாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அனைத்து பாத்திரத் தொழிலாளர் சங்கங்க ளின் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியன்று அனுப்பர்பாளையம் எல்.பி.எப். அலுவல கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஏஐ டியுசி செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், சிஐடியு சார்பில் கே.குப்புசாமி, கரு ணாமூர்த்தி, ஏஐடியுசி பி.நாகராஜ், எடிபி சார்பில் ஆர்.தேவராஜ், குணசேகரன், எல்.பி. எப். சார்பில் மு.ரத்தினசாமி, கஜேந்திரன், காமாட்சியம்மன் பாத்திர தொழிலாளர் சங் கம் சார்பில் ஆறுமுகசாமி, எஸ்.பி.அர்ஜூ னன், ஐஎன்டியுசி சார்பில் அசோக், வி.ஆர். ஈஸ்வரன், எச்.எம்.எஸ். சார்பில் பாண்டிய ராஜ், திருஞானம், பி.எம்.எஸ். சீனிவாசன், நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பாத்திர பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் வழங்க வேண்டும் என பாத்திர உற்பத்தியாளர்களையும், பட்டறைதாரர்க ளையும் அனைத்து பாத்திரத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும், தொழிலா ளர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு போனஸ் வழங்க வேண்டும். போனஸ் வழங்காத பட்ட றைகளில் வேலை செய்யும் தொழிலாளர் கள் சங்கங்களை அணுகினால், உரிய போனஸை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப் படும் என தெரிவிக்கப்பட்டது.