தில்லி
புத்தாண்டிலிருந்து புதிய அவதாரத்தைத் தொடங்கியுள்ள கொரோனா வைரஸ் சீனாவில் இயல்பு நிலையைக் கடுமையாகப் பாதித்தது மட்டுமல்லாமல் அந்நாட்டில் 3000-க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்துள்ளது.
தற்போது சீனாவிற்கு வெளியே தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ள கொரோனா ஈரான், தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளைப் பதம் பார்த்து வருகிறது. தென் கொரியாவில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இத்தாலி, ஈரானில் தினமும் 10-க்கும் பலியாகி வருவதால் அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு 29 பேருக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் வரும் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் தில்லியில் நடைபெறவிருந்த ஆசியன் பாதுகாப்பு மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.