தில்லி
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய கண்டத்தை தவிர மற்ற கண்டங்களில் வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக வடமெரிக்கா, தென் அமேரிக்கா, ஆசிய கண்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உலகில் ஒருநாளில் சராசரியாக 2.50 லட்சம் கொரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்கின்றனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில் உலகில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை (20.44 கோடி) தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையை பொறுத்தவரை 7.34 லட்சமாக உள்ளது. 1.29 கோடி பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆசியா, வடமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்திவிட்டாலே உலகின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பாதியாக குறையும்.