tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுக தேசிய கொடியை ஏந்தியபடி பெண்கள் பேரணி

மேட்டுப்பாளையம், பிப். 23- மேட்டுப்பாளையத்தில் குடியு ரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய கொடியை ஏந் தியபடி பெண்கள் பேரணியில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து பெண்கள் மட்டும் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. மேட்டுப் பாளையம் எஸ்.எம் நகர் பகுதியில் துவங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சிறுமுகை சாலையில் உள்ள பெரிய  பள்ளிவாசல் முன்புறம் நிறைவு பெற் றது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற இப்பேரணி யில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக முழக்கங் கள் எழுப்பட்டன. நாட்டை பிளவு படுத்தக் கொண்டு வரப்பட்ட குடியு ரிமை திருத்தச் சட்டத்தை உடனடி யாகத் திரும்பப் பெற வலியுறுத் தப்பட்டது. மேலும், பெண்கள் மட் டுமே பங்கேற்ற பேரணி என்ப தால் மேட்டுப்பாளையம் நகரில் இரு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.