திருப்பூரில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு
திருப்பூர், டிச. 3 - பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் நாசகர கொள்கைகளுக்கு எதிராக சரியான கொள்கையுடன் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்களோடு நெருக்க மாக செயல்பட்டு முன்னேறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி னார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 நாட்கள் நடத்தி வந்த காலை நேரத் தொடர் வகுப்பின் நிறைவு நாளான செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரையாற்றினார். நாம் வெல்வோம் என்ற தலைப்பில் அவர் பேசுகையில் கூறியதா வது: உலகில் முதலாளித்துவம் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் அடிப்படையான வாழ்க்கைப் பிரச்சனை களுக்கு முதலாளித்துவத்தால் தீர்வு காண முடியவில்லை. அதேசமயம் அடிப்படைப் பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக இன, மொழி, கலாச்சார வேறுபாடுகளைத் தூண்டிவிட்டு மக்களை பிளவுபடுத்தும் வேலையைச் செய்து வரு கிறது. இது அதிக நாட்கள் நீடிக்க முடி யாது. சோவியத் யூனியன் வீழ்ச்சி அடைந்த போது கம்யூனிஸம் முடிந்துவிட்டது என்று பல அறிஞர்கள், முதலாளித்துவ அரசியல் வல்லுநர்கள் கூறினர்.
அதேபோல் இந்தியாவிலும் நாடாளு மன்றத்தில் இடதுசாரிகள், மார்க்சிஸ்ட் கட்சியின் எண்ணிக்கை குறைந்தபோது, இந்தியாவில் இடதுசாரிகளுக்கு எதிர்கா லம் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் தற்போது என்ன சொல்கிறார்கள், இடதுசாரிகள் இல்லாமல் இந்தியாவுக்கு எதிர்காலம் இல்லை என்று ஊடகங்கள் எழுதுகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ்ஸை எதிர்க்க முடியாமல் இதர பல கட்சிகள் தடுமாறி நிற்கின்றன. ஆனால் வலதுசாரிகளுக்கு மாற்றாக இடதுசாரிகள்தான் கொள்கை அடிப்படை யில் வலுவோடு செயல்படுகிறார்கள். மக்களிடம் இனவெறி, மொழிவெறி, மத வெறி, சாதிவெறி சக்திகள் தீவிரமாக செயல்பட்டு வந்தாலும், சரியான கொள்கை அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் களப் பணி ஆற்றுகின்றனர். முனைப்போடு மக்களிடம் சென்று அவர்களுக்காகப் பணி யாற்றும் நிலையில் எதிர்காலம் நமக் கானதாக இருக்கும். நாம் முன்னேறுவோம்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். இந்த அமர்வுக்கு கல்விக்குழு சார்பில் எஸ்.எஸ்.மணியன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர். இந்த வகுப்பின் நிறைவாக, மேட்டுப் பாளையம் நடூர் அருந்ததியர் காலனியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, அனைவரும் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர்.