districts

img

ரசாயன மண்டலம் வேலைவாய்ப்பை உருவாக்காது, நோய்களை தான் உருவாக்கும் கடலூரில் சிபிஎம் நடத்திய மக்கள் கோரிக்கை மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

கடலூர், ஜூன் 12-.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் புதுப்பாளையத்தில்  மக்கள் கோரிக்கை மாநாட்டு சனிக் கிழமை (ஜூன் 11) நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் கோ. மாதவன் தலைமையில் நடை பெற்ற இந்த கோரிக்கை மாநாட்டில்  கட்சி யின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், இந்தியாவில் 75வது ஆண்டு சுதந்திர பொன் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இன்னும் லட்சக்கணக்கான வீடுகளில் கழிவறை இல்லை. கடலூருக்கு ரசாயன மண்டலம் கொண்டு வருவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தொழில் வளர்ச்சி தேவைதான். அதேவேளையில் கடலூருக்கு ரசாயன மண்டலம் வந்தால் வளர்ச்சி இருக்காது. அதற்கு பதிலாக அழிவு தான் ஏற்படும். ஏற்கனவே கடலூரில் செயல்படும் சிப்காட் தொழிற்சாலைகளால் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.

புற்றுநோய் பாதிப்பு
சென்னை அடையாறில் உள்ள  புற்றுநோய் மருத்துவமனையில் கடலூரைச் சேர்ந்தவர்கள்தான் அதிக ளவில்  சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து அரசு உடனே ஆய்வு செய்ய வேண்டும். இந்த சூழலில் ரசாயன மண்டலம் கடலூருக்குள் வந்தால் புற்றுநோய் பாதிப்பின் வீரியம் இன்னும் அதிகரிக்கும்.

அரசே ஏற்று நடத்துக
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் ஏற்கனவே 15 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.  தற்போது 6 ஆயிரத்துக்கும் குறைவான தொழிலாளர்களே அந்த பணியில் உள்ளனர்.  இன்று நிரந்தர பணி என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காவல்துறையில் மட்டுமே நிரந்தர பணி உள்ளது. பிற துறைகளில் அனைத்தும் ஒப்பந்த பணிமுறையாக மாற்றப்பட்டு வருகிறது. அம்பிகா,ஆரூரான் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவ சாயிகளுக்கு 120 கோடியை பாக்கி வைத்துள்ளது. அவற்றை அரசு பெற்றுத்தர முயற்சிக்கவேண்டும். சர்க்கரைஆலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும். இது 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்.

போராட்டத்தால் சாதித்த  மார்க்சிஸ்ட் கட்சி
ஆளும் கட்சிகளும், எதிர் கட்சிகளும் சாதிக்க முடியாத சாதனையை மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தின் மூலம்  சாதித்து வரு கிறது. சென்னையில் ஒரு ஆன்மீக விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்று அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசியி ருக்கிறார். இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதினத்தில் அரசியல் தலையீடு கூடாது என்கிறார்.  இவர் அண்ணா திமுகவா அல்லது அண்ணாமலை திமுகவா என்ற கேள்வி எழுகிறது.  ஆதினத்தை  வைத்துக்கொண்டு தமிழகத்தில் அரசியல் நடத்தலாம் என்று அண்ணாமலை நினைக்கிறார். அது ஒருபோதும் நிறைவேறாது.

உ.வாசுகி
மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், மக்களுக்காக மாற்று அரசியலை முன்வைத்து மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு நடத்தி வருகிறது. எட்டாண்டு கொண்டாட்டத்தை நடத்திவரும் ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வை பற்றி கவலைப் படவில்லை. பெட்ரோல், டீசல் மீது மோடி அரசு போடும் வரிதான் விலை வாசி உயர்வுக்கு காரணம் என்றார். 8 ஆண்டில் வருமானம் உயர வில்லை, வாழ்க்கைத் தரம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அம்பானியும், அதானியும் கொள்ளை அடிப்ப தற்கான வழிகளை தான் மோடி உரு வாக்கியுள்ளார். சாமான்ய மக்களின் வளர்ச்சி குறித்து அக்கறை கொள்ளாத மோடி அரசு பெருமுதலாளிகளின் நலனுக்காக பாடுபட்டுவருகிறது. ஏழைகளின் அடுப்பங்கரைக்கு எதுவும் வரவில்லை. ஒரு கோடி இலவச கேஸ் இணைப்பு கொடுத்து விட்டோம் என்றார்கள். ஆனால் முதல் சிலிண்டர் கொடுத்துவிட்டு மொத்தத்தையும் முடித்துவிட்டனர். படித்த இளைஞர்க ளுக்கு மோடி அரசிடம் தீர்வு இல்லை. வேலைவாய்ப்பையும் உருவாக்க வில்லை. இளைஞர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்பு வேண்டும். ஒன்றிய, மாநில அரசு பணியிடங்களில் பல லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்பட்டால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். மாநாட்டில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எம்.மருதவாணன், வி.உதயகுமார், பி.கருப்பையன், வி.சுப்புராயன், ஆர்.ராமச்சந்திரன், எஸ்.திருஅரசு, என்.எஸ்.அசோகன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கிறான் நன்றி கூறினார்.