districts

img

ஏழைகளுக்கு கல்வி கொடுப்பதே சிறந்த சமூகப் பணி! அரசு உதவி பெறும் பள்ளி நூற்றாண்டு விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சிதம்பரம், அக். 19- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையிலுள்ள சேவா மந்திர் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கி 100 ஆண்டை கடந்துள்ளது. இதை யொட்டி கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் பேசுகை யில்,“ டென்மார்க்கில் இருந்து கப்பல் மூலம் 100 ஆண்டுகளுக்கு முன்பு பரங்கிப்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார் ஆனிஸ்மேரி பீட்டர்சன்ஸ். கப்பலிருந்து இறங்கிய அவர், தனது பை உள்ளிட்ட உடமைகளை கீழே வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அது திருடப்பட்டுள்ளது. இத னால், உணவுக்கும் வழி யில்லாமல் நின்றுள்ளார். ஆனாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல், இங்குள்ள மக்கள் வறு மையில் இருக்கிறார் களே என்று வேதனை யடைந்துள்ளார். அந்த மக்களை வளமாக மாற்ற வேண்டும் என்ற மனிதநேயத்தோடு உரு வாக்கியதுதான் சேவா மந்திர் பள்ளி. இன்றைக்கு 100 ஆண்டுகளை கடந்துள் ளது” என்றார்.

ஆனிஸ்மேரி பீட்டர் சன்ஸ் நினைத்திருந்தால் கிறிஸ்துவ மிஷனரி பெயரில் அந்த பள்ளியை தொடங்கியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, சேவா மந்திர் என்று பெயர் சூட்டியதையும் சுட்டிக் காட்டினார். தற்போது வளர்ச்சி யடைந்துள்ள இந்த பள்ளியில் படித்த மாணவி விமலா சென்னை உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பணி யாற்றியுள்ளார். இங்கு படித்த மாணவிகள், மருத்து வர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என பல்வேறு பதவிகளில் உள்ளதையும் சுட்டிக் காட்டிய அவர், தமிழ் நாட்டில் 42 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டாலும், 8,000 பள்ளிகள் கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்துகின்றன. இங்கு ஏழை அடித்தட்டு மாணவர்களுக்கு சாதி, மதம் பார்க்காமல் கல்வி வழங்கப்படுகிறது. ஏழை களுக்கு கல்வி கொடுப்பது தான் சிறந்த பணி. அதனை யாராலும் அழிக்க முடி யாது. அப்படிப்பட்ட உன்ன தமான பணியை ஆனிஸ் மேரி பீட்டர்சன்ஸ் மேற்  கொண்டார் எனவும் புகழாரம் சூட்டினார். மாவட்ட ஆட்சியர் பால சுப்ரமணியன், ஆற்காடு லுத்ரன் திருச்சபை பேராயர் சாமுவேல் கென்னடி, டென்மார்க் நாட்டை சேர்ந்த லாரா, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழிசங்கர், சேவாமந்திர் நிர்வாக உறுப்பினர் ஜாஸ்வா பீட்டர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக பள்ளியின் தாளாளர் லீலாவதி வரவேற்றார். சில்வஸ்டர் ஞானராஜம் நன்றி கூறினார்.