திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஞாயிறன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ.இலக்கியன் தலைமையில் அக்கட்சியினர் சிவானந்த காலனி, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரித்தனர். இதில் கட்சியின் நிர்வாகிகள் கண்ணகி, சேது, வெங்கடேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.