ஈரோடு, ஜூன் 21- தமிழக அரசின் மடிக்கணினி தங்களுக்கு வழங்கப்படாததை கண்டித்து ஈரோடு அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்கள் பள்ளியை முற்று கையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு காசிபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகி றார்கள். இந்நிலையில் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் 2018-2019 கல்வியாண் டில் பயின்று வரும் மாணவ, மாணவிக ளுக்கு மடிக்கணினி வழங்க வெள்ளியன்று ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி.ராமலிங்கம் அப்பள்ளிக்கு வந்திருந்தார். இதையறிந்த கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவியர்கள் தங்க ளுக்கு மடிக்கணினி வழங்கப்படாதது குறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் முறை யிட்டனர். ஆனால், இதுகுறித்து எந்த பதிலும் அளிக்காமல் அவர் சென்றுவிட் டார். இதன்பின் தங்களது கோரிக்கை குறித்த மனுவை பள்ளியின் தலைமையா சிரியர் அமுதாவை சந்தித்து அளித்தனர். ஆனால், அதனை அவர் வாங்க மறுத்து விட்டார். இதனால் ஆவேசமடைந்த மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகை யிட்டு தங்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத் தின் நிர்வாகி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த திடீர் முற்றுகையால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.