tamilnadu

சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி சிஐடியு அகில இந்திய மாநாட்டிற்கு நாளை புறப்படுகிறது

கோவை, ஜன. 16–  சென்னையில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டையொட்டி சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி நாளை (ஜன.18) தியாகிகள் மேடையில் இருந்து நாளை புறப்படுகிறது.   மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளின் காரணமாக இந்திய தொழில்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தொழில் மந்தம், வேலை பறிப்பு, வேலை யின்மை போன்ற காரணங்களால் அதல பாதாளத்தில் இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது. இந்நிலையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு)வின் அகில இந்திய மாநாடு வருகிற 23 ஆம்தேதியில் இருந்து 27 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இம்மாநாடு அனைவரது கவனத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி யுள்ளது. இம்மாநாட்டை திக்கெட்டும் கொண்டு செல்லும் வகையில் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு பல் வேறு வகையிலான பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளது. இதன்ஒருபகுதியாக உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக தமிழகத்தின் 6 பகுதிகளில் இருந்து தியாகிகள் ஜோதி மாநாட்டு அரங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக தியாகத்தின் விளைநிலமாகவும், உதிரச்செங்கொடியை உயர்த்திப் பிடித்திருக்கும் உழைப் பாளி மக்களின் அடையாளமாக திகழும் சின்னியமபாளை யம் தியாகிகள் ஜோதி மாநாட்டிற்கு கொண்டு செல்லப்படு கிறது. கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் மேடை யில் இருந்து சனியன்று (நாளை) மாலை 3 மணிக்கு சிஐடியு மாநில செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை யில் ஜோதி பயணம் புறப்பட உள்ளது. இந்த ஜோதி பய ணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைக்கிறார். இதில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், பொருளாளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். சின்னியம்பாளை யத்தில் இருநது புறப்படும் தியாகிகள் ஜோதிக்கு ஹோப் காலேஜ், கணபதி பேருந்து நிலையம், துடியலூர், நரசிம்ம நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், மேட் டுப்பாளையம் ஆகிய மையங்களில் வரவேற்பு அளிக்கப் படுகிறது. இதனைத்தொடர்ந்து 19 ஆம்தேதி உதகை மாவட்டத்தில் குன்னூர், கைகாட்டி, ஆகிய பகுதிகளிலும் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திற்கும் செல்கிறது. இந்த ஜோதி ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வழியாக 23 ஆம்தேதி சென்னை மாநாட்டு அரங்கில் ஒப்படைக்கப்பட உள்ளது.