கோவை, ஜூலை 30– தமிழகத்திலேயே அதிக தென்னை உற்பத்தி உள்ள கோவை மாவட் டத்தை மையப்படுத்தி தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று தமிழக தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொப்பரை தேங்காய் விலையை கிலோவிற்கு ரூ.120 உயர்த்திக் கொடுக்க வேண்டும். உரித்த தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். தமிழ கத்திலேயே அதிகப்படியாக தென்னை விவசாயம் கோவையில் நடைபெறுவ தால் கோவையை மையப்படுத்தி தென்னை வளர்ச்சி வாரியம் அமைக் கப்பட வேண்டும். வறட்சியில் பட்டு போன தென்னைக்கு தலா ரூ.10 ஆயி ரம் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு ஏ.காளப்பன் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சி.திருமலைசாமி முன்னிலை வகித்தார். போராட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநில அமைப் பாளர் அ.விஜயமுருகன் சிறப்புரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தின் மாவட்டதலைவர் வி.பி.இளங் கோவன், செயலாளர் வி.ஆர்.பழனி சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற் றனர்.