தஞ்சாவூர், ஜூலை 5- தமிழக அரசு குறுவை சாகுபடியை ஊக்கு விக்கும் விதமாக, டெல்டா மாவட்டங்க ளுக்கு, உடனடியாக குறுவை தொகுப்புத் திட்டத்தை வழங்க வேண்டும். கர்நா டகத்திலிருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு வர வேண்டிய காவிரி நீரை வலி யுறுத்தி பெற வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் வழங்கி கடைமடை வரை விவசா யம் நடைபெறுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில், தஞ்சை ரயிலடியில் சனி க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.அருளரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செய லாளர் என்.குருசாமி, வி.ச மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஞானமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.