தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை, மே 27 - விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை சீர்குலைக்கும் மின்சார சட்டம் 2020ஐ திரும்பபெற வலி யுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை சீர்குலைக்கும் மின்சார சட்டம் 2020ஐ திரும்பபெற வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்காப் பீட்டு பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா நிவாரணநிதியாக விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.7500 வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி மாநிலம் தழுவிய போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் அறைகூவல் விடுத் தது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சூலூர், மதுக்கரை, கிணத் துக்கடவு, தொண்டாமுத்தூர் உள் ளிட்ட மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் வி.பி.இளங்கோவன், செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி மற்றும் நிர்வா கிகள் எஸ்.கருப்பையா, காளப் பன், ரவிச்சந்திரன், ஆறுச்சாமி, துரைசாமி, திருமலைசாமி, ரவீந்தி ரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து உரையாற்றினர். இதனைத்தொ டர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரி களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
திருப்பூர்
திருப்பூரில் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை வலி யுறுத்தி, வடக்கு ஒன்றியம் பெருமா நல்லூர், ஊத்துக்குளி, பொங்க லூர், காங்கேயம், உடுமலைப் பேட்டை, தாராபுரம், இடுவாய், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டத்துணைத் தலைவர் எஸ்.முத்துக்கண்ணன், ரங்கசாமி, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, எஸ்.பரமசிவம், ஒன்றிய செயலா ளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் பி.டில்லிபாபு, விவ சாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட துணை செயலாளர் எஸ்.எஸ்.சின் னராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மாவட்ட குழு உறுப்பினர் மா.சிவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.முனு சாமி, மாவட்ட துணைச் செயலா ளர் விவேகானந்தன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சின்னுசாமி, பழனிசாமி, மாவட்ட பொருளாளர் விஜயகுமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கிடுசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பு உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப் பினர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலை வர் வீ .தங்கவேல், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்ட பொருளா ளர் அன்பழகன், சிபிஎம் வாழப் பாடி ஒன்றிய செயலாளர் பழனி முத்து, ஏ.அர்த்தனாரி, கே.சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.