districts

img

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரை, பிப்.23- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலை ஞர் நூற்றாண்டு ஏறு தழுவு தல் அரங்க மைதானத்தில் தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகம் சார்பாக ஜல்  லிக்கட்டு போட்டி ஞாயி றன்று காலையில் 8.30 மணிக்கு தொடங்கியது.  இந்த போட்டியை வணிக வரி மற்றும் பத்திரப்பதி வுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கொடி அசைத்து  தொடங்கி வைத்தார். முன்ன தாக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர் ஏ.வெங்க டேசன், டி.எஸ்.பி. ஆனந்த ராஜ் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னி லையில் ஜல்லிக்கட்டு நிகழ்  வில் பங்கேற்ற மாடுபிடி  வீரர்கள் பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்ட னர். வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்து வெளியே வந்த முரட்டு காளைகளை, போட்டிபோட்டு கொண்டு இளைஞர்கள் மடக்கி பிடித்த னர். தங்ககாசு, சைக்கிள், மிக்ஸி, மெத்தை உள்ளிட்ட  பல பரிசுகள் வழங்கப்பட்  டன. மேலும் பிடிபடாத  மாட்டின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங்கப்  பட்டது. விடுமுறை நாள் என்ப தால் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இந்த போட்டியில் 685 காளை கள், 350 வீரர்களும் பங்கேற்ற னர். ஜல்லிக்கட்டு போட்டி 7 சுற்றுகளாக நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திரு ச்சி, திண்டுக்கல், சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்க ளைச் சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங் கேற்றனர்.  ஜல்லிகட்டு போட்டி யில் 26 பேர் காயமடைந்த னர். மதுரை அரசு மருத்துவ மனைக்கு 5 பேர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  முன்னதாக காளை களுக்கும், வீரர்களுக்கும் அனைத்து மருத்துவ பரி சோதனைகள் நடத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.