சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா வரும் 26 ம் தேதி தொடங்குகிறது
சிதம்பரம் நாட்டியா ஞ்சலி அறக்கட்டளை சார்பில் 44வது ஆண்டு நாட்டி யாஞ்சலி வருகிற .26-ம் தேதி தெற்குரதவீதி ராஜாசர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில் தொடங்கி மார்ச்.2-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறு கிறது. இதுகுறித்து நாட்டியாஞ் சலி அறக்கட்டளை செய லாளர் வழக்கறிஞர் ஏ,சம்ப ந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது சிதம்பரததில் இந் தாண்டு நடைபெறவுள்ள நாட்டியாஞ்சலியில் நாடகம், கதக், கூச்சுப்புடி, மணிப்புரி நடனம் உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. இதில் வடமாநிலங்க ளிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து நாட்டியக் கலை ஞர்கள் பங்கேற்று நாட்டிய அஞ்சலி செலுத்துகின்றனர். இதில் 450 க்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு இளம் கலைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்துள்ளோம். சிதம்பரத்தில் நாட்டிய அஞ்சலி விழா தொடங் கிய பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நாட்டி யம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நாட்டி யாஞ்சலி அறங்காவலர் குழுத் தலைவர் டாக்டர் ஆர். முத்துக்குமரன், துணைத் தலைவர் சக்தி ஆர்.நட ராஜன், பொருளாளர் எம். கணபதி மற்றும் உறுப்பி னர்கள் உடன் இருந்தனர்.