இராமநாதபுரம், பிப்.23- தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட் டப் பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க அரங்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஜெ.ஜே.லியோன் தலைமையில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலைவர் வின் சென்ட் வீரு, மாவட்ட இணைச் செயலா ளர் ஜெரோம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் சசிக்குமார் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் துவக்கவுரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநில தலைவர் முனைவர் தினகரன் கருத்துரை வழங்கினார். மாவட்டச் செய லாளர் கு.காந்தி வேலை அறிக்கை சமர்ப் பித்தார். மாவட்ட பொருளாளர் பாலமுரு கன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார். துளிர் திறனறிதல் தேர்வு கண்காணிப்பா ளராக செயல்பட்ட 30க்கும் மேற்பட்ட தன் னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் அமலராஜன் நிறைவுரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் நன்றியுரை வழங்கினார்.