நேர்மை தவறாத ஆட்டோ ஓட்டுநருக்கு சிஐடியு பாராட்டு
ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த மிசோரம் மாநில பெண் தவறவிட்ட சுமார் 50ஆயிரம் பணம், ஏடிஎம் கார்டு, அடையாள அட்டைகளை உரியவரிடம் ஒப்படைத்த வேலூர் மாநகரம் அன்னை தெரசா ஆட்டோ சிஐடியு ஸ்டேண்டு கிளை உறுப்பினர் ஆர்.நாகராஜை ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் எம்.சிவாஜி சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கவுரவித்தார். இதில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.ராஜேந்திரன், செயலாளர் முரளி, பொருளாளர் ராமு, மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ்.காமராஜ், நந்தகுமார், கிளை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.