சேலம், செப். 10- சேலம் உருக்காலையை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கண் டித்து 37 ஆவது நாளாக ஆலை வாயில் முன்பு தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத் தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் உருக்கா லையை தனியாருக் தாரைவார்க் கும் வகையில் மத்திய அரசு சர்வ தேச டெண்ருக்கு அழைப்பு விடுத் துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து சேலம் உருக்காலை தொழி லாளர்கள் ஆலையின் பிரதான நுழைவாயில் முன்பு கடந்த அக.5 ஆம் தேதி முதல் தொடர் காத்தி ருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று 37 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் வாழ்த்திப் பேசினார். மேலும், இந்த போராட் டத்தில் காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலா ளர் எஸ்.கே.அர்த்தனாரி, சிஐ டியு மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் மற்றும் சேலம் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் திர ளாக கலந்து கொண்டனர்.