tamilnadu

img

ஆச்சான்குளத்தை தூர்வார எம்.பி., தொகுதி நிதியில் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஒன்றிணைந்து நிற்போம்

கோவை, ஜூலை 20– அடுத்த தலைமுறைக்கு வழி காட்டியாக நீர்நிலைகளை பாது காப்பதில் ஒன்றிணைந்து நிற் போம் என கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் கூறியுள்ளாார்.  கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆச்சான் குளம். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் உள்ளது. இக்குளத்தைத் தூர்வார வேண்டும் என்பது சூலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பொது  மக்களின் நீண்டகால கோரிக் கையாக இருந்தது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த நாடாளு மன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆச்சான் குளம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பி.ஆர்.நடராஜன் அளித்த வாக்குறுதியின்படி, அதை நிறைவேற்றும் விதமாக குளத்தைத் தூர்வார தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.75 லட்சம் ஒதுக்கினார்.  இதனையடுத்து சனியன்று ஆச்சான்குளம் தூர்வாரும் பணி தொடங்கியது. துவக்க நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி  பொது செயலாளர் ஈஸ்வரன்,  மருத்துவர் தங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செய லாளர் எம்.ஆறுமுகம், பாஜக விவசாய அணி நிர்வாகி ஜி.கே.நாகராஜ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளர்  சு.பழ னிச்சாமி, சமூக ஆர்வலர்கள் வேலுச்சாமி, பிரபாகரன் மற் றும் விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய பி.ஆர். நடராஜன், நம் கண்முன்னே நீர்நிலைகள் அழிந்து வருவதை இனியும் பார்த்துக் கொண்டிருக் கக் கூடாது. அடுத்த தலை முறைக்கு எவ்வித சங்க வித்தி யாசமின்றி ஒன்றிணைந்து நீர் நிலைகளைப் பாதுகாக்கும் பணி களை முன்னெடுப்போம். ஆச் சான்குளத்தை தூர்வாருவதற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.25 லட்சத்தை நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு செய்ய பரிந்துரை கடிதம் அளிக்கிறேன். அதேநேரத்தில் இதுபோன்ற செயலுக்கு பல் வேறு தரப்பினரும் உதவ முன் வருவார்கள். அவர்களிடம் மனித உழைப்பையும், இயந்திரங்களின் உதவியையும் பெற்றுக் கொள் வோம். இப்பணியைக் கண் காணித்து, அனைவரும் ஒரே மனிதனாக நின்று ஆச்சான்குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பிய காட்சியை பார்ப்போம் என்றார்.  முன்னதாக பி.ஆர்.நடராஜன் தலைமையில் விவசாயிகள் மற் றும் சமூக ஆர்வலர்கள்  கொண்ட  13 பேர் அடங்கிய ஆச்சான்குளம் பாதுகாப்புக்குழு தேர்ந்தெடுக்கப் பட்டது. இதனை தொடர்ந்து தூர்வாரும் பணியினை கோவை  நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.  இதனையடுத்து செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வ ரன், மாவட்ட ஆட்சியர், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என அனைவரையும் ஒருங்கிணைத்து இப்பணியை செய்ய நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் திட்டமிட்டார். ஆனால்  அவசர அவசரமாக அமைச்சர்  தலைமையில் சில நாட்களுக்கு முன்பு யாரையும் அரவணைக் காமல் தனியாக  தூர்வார பூமி பூசை போடப்பட்டது. இருந்தா லும் மக்களின் நீண்டகால கோரிக்கையான ஆச்சான் குளம் தூர்வாரப்படுவது மகிழ்ச்சிதான்.  அரசு நடத்திய தூர்வாரும் நிகழ்ச் சிக்கு நாடாளுமன்ற உறுப்பி னரை அழைக்காதது தவறான நடவடிக்கை. அரசு குடிமராமத்து பணிகளை முறையாக செய்கின் றதா என்ற சந்தேகம் ஏற்பட் டுள்ளது. அரசு குடிமராமத்து  நடைபெற்ற  இடங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றார்.