tamilnadu

img

நீட் தேர்வு அநீதியை களைந்திடு தூக்கு கயிறுடன் மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 8– ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை காவு வாங் கும் நீட் தேர்வு அநீதியை களைந் திட வலியுறுத்தி சனியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங் கத்தினர் கோவையில் கைது செய் யப்பட்டனர்.  தமிழக மாணவர்களின் மருத் துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. ஆனா லும் மத்திய அரசு கட்டாயமாக  நீட்தேர்வை தமிழகத்திற்கு திணித்து உள்ளது. இதனால் ஒவ் வொரு ஆண்டும் நீட் தேர்வின் முடிவில் மாணவர்கள் தங்களின் மருத்துவ கனவை காவு வாங்கிய விரக்த்தியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமீபத்தில் வெளி யான நீட் தேர்வு முடிவையடுத்தும் திருப்பூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாணவிகள் தற்கொலை செய்து மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்நிலையில் மாநிலம் முழு வதும் நீட்தேர்வு எனும் அநீதிக் கெதிரான போராட்டம் உக்கிரம் அடைந்து வருகிறது. இந்திய மாண வர் சங்கம் மாநிலம் முழுவதும் கண் டன இயக்கங்கள் நடத்த அறை கூவல் விடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் சிலை அருகில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் நீட் தேர்வால் தற் கொலை செய்து கொண்ட 3 மாண வர்களுக்கு  நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி யும் மாணவர்கள் தூக்குக் கயிறு கட்டி நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். மத்திய அரசின் நீட் திணிப்பிற்கு எதிராகவும், மாநில அரசின் இயலாமையைக் கண்டித் தும் ஆவேச முழக்கங்களை எழுப் பினர்.  இதனையடுத்து அனுமதி யின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தாக இந்திய மாணவர் சங்கத் தின் மாவட்ட தலைவர் தினேஷ் குமார், மாநில செயற்குழு உறுப் பினர் காவ்யா, மாவட்ட துனை செயலாளர் சஞ்சய் பிரதாப் உள் ளிட்ட அனைத்து மாணவர்களை யும் காவல்துறையினர் கைது செய்தனர்.