சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்
சேலம், நவ.28- சாக்கடை கால்வாய் அமைத்த பின்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தி வியாழ னன்று சிபிஎம் தலைமையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். சேலம் மாநகர கிச்சிப்பாளையம் பகுதியில் உள்ள காந்திமகான் தெருவில் தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை இணைக்கும் சாலையான நாராயணன் நகர் சாலை வரை கழிவு நீர் செல்லும் வகையில் சாக்கடை வசதி அமைத்த பின்பு சாலையை சீரமைக்க வேண்டும் என காந்திமகான் தெரு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன் தலைமையில் ஆர்ப்பாட் டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பேச்சு வார்த்தையில் தற்போது கழிவுநீர் செல்வ தற்கு தற்காலிக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் காந்திமகான் தெரு தாழ்வான பகுதியாகும். சேலம் குமரகிரி ஏரியில் இருந்து வரும் நீர் அனைத்தும் இப்பகுதியை ஆக்கிரமித்து மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியிலுள்ள சுடுகாட்டிற்கு செல்ல முடியவில்லை. அங்கும் கழிவு நீர் சூழ்ந்து உள்ளது எனவும் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்த பின்பே சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உரிய முறையில் பரிசீலிப்ப தாக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காந்திமகான் தெரு கிளை செயலாளர் சேட்டு என்கிற சிவகுமார் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.