பண்ருட்டி, நவ. 16 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் சென்னை செல்லும் சாலை விரி வாக்க பணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலம் கையகப்படுத் தப்பட்டது. இந்நிலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இதுவரை சாலை விரிவாக்கப்படவில்லை. மேலும் சாலை குண்டும் குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி எல்.என். புரம் பகுதியில் சாலை விரிவாக்க பணி முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை மிகவும் சேத மடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் அந்த சாலை யில் மழை நீர் தேங்கியுள்ள தால் நடந்து கூட செல்ல முடியாத நிலை. மேலும் பைக்கில் செல்வோர் பல முறை சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்துள்ள னர். மேலும் வாகன விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் புதன்கிழமை அந்த பகு தியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட னர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.