அரியலூர், டிச.8- அரியலூர் மாவட்டத்தில் சில்லறை விலைக்கு பால் விற்பனை நிறுத்தம் செய் யப்பட்டதைக் கண்டித்து அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டறவு சங்கம் முன்பு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு சங்கங்கள் தங்கள் கொள் முதல் செய்யும் பாலில் உள்ளூர் விற்பனை 10 சதவீதம் மட்டும் மேற்கொண்டு மீத முள்ள பால் முழுவதையும் திருச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றி யத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், தவ றும் பட்சத்தில் சங்கத்தலைவர், செயலா ளர், பணியாளர்கள் மீது உடனுக்குடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சரின் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள் ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத் தில் சில்லரையில் வாங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதிக் குள்ளாகி வந்தனர். இதனால், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் முன்பு புதனன்று பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கூட்டுறவு சங்க நிர்வாகிகள், இணைப் பதிவாளரிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு, நாளை (இன்று) முதல் விற்பனைக்கு முக்கி யத்துவம் அளிக்கப்படும் என்று தெரி வித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதே போல், பொய்யாத நல்லூர், வி.கைகாட்டி, கீழப்பழுவூர் போன்ற இடங்களிலும் போராட்டம் நடை பெற்றது. இதனிடையே பால் விற்பனையில் பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று அரியலூர் ஆட்சியரிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணை யம், அரியலூர் பால் உற்பத்தியாளர்கள் சங்க பணியாளர்கள் புதனன்று மனு அளித் துள்ளனர்.