districts

img

ரயில்வே பாதையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

தஞ்சாவூர், மார்ச்.3- தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள சொர்ணக் காடு அருகே ஏற்கனவே புழக் கத்தில் இருந்த 132 சி ரயில்வே கேட்டை, ரயில்வே நிர்வாகம் மூடிவிட்டு ரயில்வே கீழ் பாலம் அமைத்தது.  இந்தப் பாலம் முறையான வடிவமைப்பு இல்லாததால், பேருந்து, டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்தப் பாதையை பயன்படுத்தும் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கா னோர் பாதிக்கப்பட்டனர்.  இந்நிலையில், ரயில்வே கீழ் பாலம் அருகே உள்ள மற்றொரு இடத்தை  மாற்றுப் பாதையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த வழியாகவே பேருந்துகள், விவசாயப் பணி க்கு லாரி, டிராக்டர்கள் சென்று  வந்தநிலையில், அந்த பாதை யை மூடுவதற்கு ரயில்வே நிர் வாகம் முயற்சி மேற் கொண்டது.  இந்நிலையில், வியாழனன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்தப் பாதையை பயன்படுத்தக்கூடாது என ரயில்வே துறை சார்பில் பேனர் வைக்கப்பட்டது. இதனால், பாதையை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்த ஒன்று திரண்டனர்.  இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த ரயில்வே துறையைச் சேர்ந்த இருப்புப் பாதை முதுநிலை பகுதி பொறி யாளர் பழனிவேல், இளநிலை பொறியாளர் பாலகுமாரன், ரயில்வே காவல்துறையினர், படப்பனார்வயல் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜய பாஸ்கரன் (சொர்ணக்காடு), கணேசன் (வலப்பிரமன்காடு), விஜயகுமார் (மணக்காடு), பழனிமுருகன் (மாத்தூர் ராம சாமிபுரம்) சமூக ஆர்வலர்கள் மகாராஜா, சேகர், செல்வ ராஜ், ராஜா மற்றும் பொதுமக்க ளுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.  இதில், இரண்டொரு நாளில் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக வும் இதில் உரிய முடிவு எடுக் கப்படும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து நடைபெற விருந்த பராமரிப்பு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டது.