கோவை, ஆக. 1- விதிமுறைகளை மீறி இயக்கப்ப டும் பேருந்துகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்ற கோவை மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறிஇயக்கப்பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து அடுக்கடுக்கான புகார்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கவனத் திற்கு வந்தது. இதையடுத்து, கோவை மாவட் டத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் விதிமுறைக ளுக்கு உட்பட்டு இயக்கப்பட வேண் டும் எனவும், பொதுமக்களின் பாது காப்பை போக்குவரத்து காவல்துறை யும், வட்டாரப் போக்குவரத்து அலு வலர்களும் உறுதிபடுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கு. ராசா மணி உத்தரவிட்டார். மேலும், விதி முறைகளுக்கு மாறாக இயக்கப்படும் பேருந்துகள் மீது 1988ஆம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி நட வடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்ச ரித்திருந்தார். ஆனால், மாவட்ட ஆட்சி யரின் அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே, வழக்கம் போல் உப்பிலி பாளையம் பகுதிக்கு வர வேண்டிய தனியார் பேருந்துகள் விதிமுறைக ளுக்கு மாறாக அப்பகுதிக்கு வராமல் திரும்பிச் சென்றது. இதனால், ஆத்தி ரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விதிமீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்தை சிறை பிடித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து பேருந்தை விடுவித்த னர். இதனால், அப்பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.