பென்னாகரம், ஆக.25- தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ள நிலையில், 17 நாட்களுக்கு பின் பரிசல் இயக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வய நாட்டிலும் மழை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிந்துள்ளது. சனியன்று விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஞாயிறன்று அதேநிலையில் நீடிக்கிறது. இதன் காரணமாக, வெள்ளக்காடாக தென் பட்ட ஐவர்பாணி, ஐந்தருவிகளில் தண்ணீர் குறைந்து அருவிகள் வெளியே தெரி கின்றன. நீர்வரத்து குறைந்ததால், பரிசல் இயக்க அனுமதி வழங்கவேண்டும் என பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பரிசல் இயக்க கடந்த 17 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை யை மாவட்ட நிர்வாகம் ஞாயிறன்று நீக்கியது. மேலும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நிபந்தனைகளோடு அனுமதி வழங்கியது. சின்னாறு வழி யாக மணல் மேடு வரை பரிசலை இயக்கிக் கொள்ளலாம் என அனுமதி வழங்கிய தையடுத்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி யோடு பரிசலில் சென்று இயற்கை காட்சி களை ரசித்து வந்தனர். ஆனால் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் அருவியில் கம்பிகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்த உள்ள நிலையில், மராமத்து பணி செய்ய மேற்கொள்ள வேண்டி உள்ள தால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.