தருமபுரி, ஆக.6- ஒகேனக்கல் சுற்றுலா தலத் தில் 14 நாட்களுக்குப் பின் மீண் டும் பரிசல் இயக்க மாவட்ட நிர் வாகம் செவ்வாயன்று அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம் ஒகேனக்கல் சுற் றுலா தலத்திற்கு கர்நாடகா உள் ளிட்ட வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கர்நாடக அணை களில் இருந்து கடந்த மாதம் தண் ணீர் திறக்கப்பட்டது. அதன் கார ணமாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி யில் தண்ணீர் வரத்து அதிகமா னது. சுமார் 10 ஆயிரம் கன அடி அளவிற்கான தண்ணீர் வரத்து இருந்த காரணத்தால் பரிசலில் சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்ப் பதைத் தடை செய்து மாவட்ட நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தடை உத்தரவு பிறப் பித்திருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்தோடு வந்து சென்றனர். இதற்கிடையில் ஆடிப் பெருக்கு விழா ஒகேனக்கல்லில் கடந்த சனிக்கிழமை துவங்கி திங்கட்கிழமை வரை நடைபெற் றது. அப்போதும் பரிசல் இயக்கம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். இந்நிலையில் கர் நாடக அணையிலிருந்து வரும் தண்ணீர் வரத்து குறைந்த கார ணத்தால், தற்போது செவ்வாய்க் கிழமை முதல் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக் கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் அறிவிக்கப்பட் டுள்ளது.