கோவை, மார்ச் 16 - கோவையில் மத்திய ஜவுளித் துறையின் கீழ் இயங்கிவரும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மூடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தொடர்ந்து மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கோவை நாடாளு மன்ற உறுப்பினரின் தலையீட்டால் புதிய இயக்குநர் நியமிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் தலையீடு மற்றும் அழுத்தம் கார ணமாக தங்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறியுள்ளதாக மாணவர்கள் நன்றி தெரிவித்துள் ளனர். கோவையில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி மத்திய ஜவு ளித்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரு கிறது. இந்த கல்லூரியில் பி.எஸ்.சி டெக்ஸ்டைல்ஸ், எம்.பி.ஏ அப் பேரல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ டெக்ஸ்டைல்ஸ் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ ரிடெயில் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள் ளன. தமிழகம் மட்டுமின்றி மேற்கு வங்கம், ஆந்திரா, அந்தமான் நிக் கோபர், ஒரிசா, இமாச்சல் பிரதேசம், தெலுங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியை மூடுவது என்கிற வகையில் மாண வர் சேர்க்கை அனுமதிக்கப்பட வில்லை. இதனையடுத்து, இந்த கல்லூரியை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழ கத்துடன் இணைக்க வேண்டும் என மாணவர்கள் கடந்த பத்து நாட் களாக போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கவனத்திற்கு மாணவர்கள் கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து பி.ஆர்.நடராஜன் எம்.பி., இக்கல்லூரி இயங்க வேண் டிய அவசியம் குறித்து ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிர்தி ராணிக்கு விரிவான கடிதம் எழு தினார். மேலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசினார். இதன்தொடர்ச்சியாக காட்டன் கார்ப்பரேசன் இந்தியாவின் பி.அல்லிராணி இக்கல்லூரியின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட் டுள்ளார். இதனையடுத்து இவர் திங்களன்று மாணவர்களிடம் பேசுகையில், மாணவர்களின் இதர கோரிக்கையை ஜவுளித்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவ டிக்கை மேற்கொள்வேன் என உறு தியளித்தார். மேலும் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் தொடர்ந்து நடை பெறும் என தெரிவித்தார். இதனை யடுத்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு வகுப்புக ளுக்கு திரும்பினர். இதுகுறித்து மாணவர்கள் கூறு கையில், எங்களின் நியாயமான கோரிக்கையை கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் கவனத்திற்கு கொண்டு சென் றோம். அவர் உடனடியாக தலை யிட்டு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியும், ஜவுளித்துறை சார்ந்த அதிகாரிகளிடமும் பேசினார். நாடாளுமன்ற உறுப்பினரின் உட னடியான தலையீட்டின் காரண மாக எங்களின் கோரிக்கை வெற்றி யடைந்திருக்கிறது. அவருக்கு மாண வர்களின் சார்பில் நன்றி தெரிவித் துக் கொள்கிறோம் என்றனர்.