கோவை, ஜூன் 22- கோவை நஞ்சுண்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு அடையாளம் தெரியாத நபர் கள் முக கவசம் அணிவித்த தால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று பர வலை கட்டுப்படுத்த பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிவது கட்டா யம் என மத்திய, மாநில அரசுகள் அறி வுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பெரும் பாலான இடங்களில் சிறுவர்கள் முதல் பெரி யவர்கள் வரை அனைவரும் முக கவசம் அணிந்து பொது இடங்களுக்கு வந்து செல் வதை காண முடிகிறது.
இந்த நிலையில் கோவை நஞ்சுண்டாபுரம் பேருந்து நிறுத் தம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு ஞாயிறன்று நள்ளி ரவில் அடையாளம் தெரியாத நபர்கள் முக கவசம் அணிவித்து சென்றுள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு முக கவசம் அணிவித்து இருப்பதை காண அப்ப குதி மக்கள் கூடியதால், சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அப்பகுதியை சார்ந்த எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா விசு வாசிகள் சிலையில் இருந்த முகக்கவசங் களை அகற்றினர். கொரோனா தொற்றிலி ருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மனி தர்கள் முககவசம் அணியும் நிலையில் பொது இடத்தில் இருந்த சிலைகளும் முகக்க வசத்துடன் காட்சி அளித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.