கூம்பு வடிவ ஒலி பெருக்கி, தடுப்பு கட்டை கள் வைத்த டிக்கட் கவுண்டர் மற்றும் சுவ ரொட்டி (போஸ்டர்) இது கிராமப்புற டெண்ட் கொட்டாய் எனப்படும் திரை அரங்கின் அடையாளமாகும். இந்த அடையாளங்களு டன் போஸ்டருக்குப் பதில் டாஸ்மாக் போர்டு டன் காட்சியளிக்கிறது தமிழக அரசு நடத் தும் மதுபானக் கடைகள். கொரோனா ஊர டங்கு அமலில் இருந்தாலும் மது விற்பனை திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுப்பிரியர் களை கொரோனா வைரஸ் தொற்றாம லிருக்க இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மனித குலத்தை கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளாக் காமல் மதுப்பிரியர்களுக்கு சேவை அளிக்க வேண்டும் எனும் தமிழக அரசின் கடமை உணர்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதேநேரம், இந்த பிரத்யேக கட்டமைப் பிற்காக டாஸ்மாக் நிர்வாகம் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பதோடு, கடை ஊழியர்களே இப்பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர் என்பதே உண்மை.
முன்னதாக, வழக்கமாக கிடங்கிலிருந்து வரும் சரக்கிற்கு லாரி வாடகை நீங்களாக இறக்கு கூலியை ஒரு பெட்டிக்கு ரூ.3 முதல் 5 வரை ஊழியர்களே கொடுத்து வருகின்றனர். மதுக்கடைக்கான வாடகையும் ஊழியர்களே கொடுக்கின்றனர். சிறு பகுதியை மட்டுமே டாஸ்மாக் நிர்வாகம் கொடுக்கிறது. இதே போல், மின் கட்டணமாக சுமார் ரூ.8 ஆயிரம் வரை மின்வாரியம் வசூலிக்கும் நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் ரூ.4 ஆயிரம் மட்டும் கொடுத்து வருகிறது. முன்னர், மதுவிற்ப னையைத் தொடர்ந்து காலியான அட்டை பெட்டிகளைக் கொள்முதல் செய்ய (ஐஎம்எப் எல் பெட்டி ஒன்றிற்கு ரூ.3.45, பீர் பெட்டி ஒன்றிற்கு ரூ.2.62 என்ற அடிப்படையில்) டெண்டர் விடப்பட்டது. ஆனால், தற்போது வெளி மார்க்கெட்டில் விலை குறைந்து விட்ட நிலையில் டெண்டர் எடுத்தவர் காலி பெட்டி கள் கொள்முதலை நிறுத்தி விட்டனர்.
இத னால் வந்த விலைக்கு அட்டை பெட்டிகளை தள்ளிவிடும் நிலையில், அந்த வகையில் மட்டும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை ஊழியர்கள் தலையில் விழுகிறது. இதேபோல் கடை அமைந்துள்ள இடங்க ளுக்கு டிடிசிபி அப்ரூவல் பெறுவது கட்டாய மாக்கப்பட்டது. மதுக்கடைக்கு வாடகைக்கு விட்ட உரிமையாளர்கள் செய்ய வேண்டிய அப்பணிக்கான செலவும் ஊழியர்கள் தலை யில் சுமத்தப்பட்டது. இதற்கும் கடையின் ஊழியர்கள் தலா ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி கான்கிரீட் கூரை இல்லாத கடைகளுக்கு சரக்கு அனுப்ப முடியாது என்ற நிர்பந்தத்தால் பல இடங்க ளில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஊழியர்களே செலவு செய்து மதுக்கடைக ளுக்கு கான்க்ரீட் கூரை அமைத்தனர். இதன் பின்னர் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப் பறி ஆகியவற்றைத் தடுப்பதற்காக மதுக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத் துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இந்த செல வுக்கும் ஊழியர்களே பொறுப்பாக்கப்பட்ட னர். இவ்வாறு அரசு வேலை என நம்பி வந்து டாஸ்மாக் நிர்வாகத்தில் மேற்பார்வை யாளர்களாக 6,913, விற்பனையாளர்களாக 15,347, உதவி விற்பனையாளர்களாக 3,437 என பணியாற்றும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள்தோறும் புதுப்புது நெருக்கடிகளால் கடுமையான மன உளைச்சலுக்கும், தவிப்பிற்கும் உள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறுகையில், மேற்கண்ட தொல்லைக ளுக்காக மதுபிரியர்களிடம் பாட்டிலுக்கு ரூ.5,10 கூடுதலாகக் கேட்கும்போது இது லஞ்சமா அல்லது பிச்சையா எனக் கேட்கின்ற னர். உங்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்கின்றனர்.
அரசு நியாயமான சம்பளம், சட்ட உரிமைகளைக் கொடுத்தால் இது போன்ற ஏச்சு, பேச்சுகளைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது. மேலும், சட்டமன்ற உறுப்பினர் அல்லது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர், காவல், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறையினர், மாவட்ட மேலாளர் உள்ளிட்டோருக்கு மாதந் தோறும் மாமூல் கொடுக்க வேண்டும். இதற்கு மட்டும் மாதம் ரூ.30 ஆயிரம் வரை (கடை யின் வருமானத்தைப் பொறுத்து) தேவைப் படுகிறது. அதனை கொடுக்க மறுக்கும்போது இடமாறுதல் செய்யப்படுகிறோம். முன்ன தாக, கடையில் வேலை செய்பவரை கிடங் கிற்கு இடமாறுதல் செய்யக்கூடாது என்பது விதி. ஆனால், அத்தகைய எவ்வித விதிகளும் டாஸ்மாக் நிர்வாகத்தில் பின்பற்றப்படுவ தில்லை வேதனையோடு தெரிவிக்கின்றனர். இதுதவிர காவல் துறையினருக்கு இசை வாக நடக்காததால், ஊரடங்கு காலத்தில் மது விற்றதாக மதுக்கடை ஊழியர்கள் மீதே வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படும் நிலை உள்ளது.
இதற்கு டாஸ்மாக் நிர்வாக மும் உடன்படுகிறது என்பதே பெரும் வேதனை. மேலும், துணை ஆட்சியர் நிலை யிலுள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளரே அந்த பொறுப்பிற்கு வரும்போது ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்துதான் வந்தேன். ஒரு வருடத்தில் இடமாறுதல் செய்யப்படு வேன். அதற்குள் அந்த தொகையை எடுக்க வேண்டும் என்கிறார் அதிகாரிகள் வெளிப் படையாகவே தெரிவிக்கும் நிலை இருப்பதாக ஊழியர்கள் ஆதங்கப்படுகின்ற னர். மேலும், மதுக்கூடம் என்பது மதுக் கடைக்கு உட்பட்டது. ஆனால் மதுக்கூ டத்திற்கு உட்பட்டதுதான் மதுக்கடை எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மதுக்கடை பூட்டப்பட்ட பிறகும் கடை திறப்பதற்கு முன்பும் பின்பும் சட்ட விரோத மது விற் பனை என்பது இயல்பானதாகி வருகிறது. இதற்கு கடை ஊழியர்கள் உடன்பட வேண் டும். இல்லையெனில் அந்த ஊழியர்கள் பணி யிட மாற்றம் செய்யப்படுவதும், தாக்கப் படுவதும் என்பது சாதாரணமாக நடை பெறுகிறது.
சமீபத்தில் ஈரோடு மாவட் டம், புளியம்பட்டி பகுதியில் சட்ட விரோத மதுக்கூடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஆய்விற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் சட்ட விரோத மதுக்கூடம் நடத் துபவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நடை பெற்றது இதற்கு உதாரணமாகும். இது குறித்து புகார் செய்த ஊழியர் சில நாட்களி லேயே பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதுபோன்ற விதிமீறல்களைக் கேட்கும் போது தமிழகத்தில் மது விற்பனையை அரசுதான் நடத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது. மேலும், இத்தகைய இடர்களையும், நெருக்கடிகளையும் சந்திக்கும் தொழிலாளர் களை பாதுகாக்க வேண்டிய அரசு நிர்வா கமோ, தொழிலாளர் சட்ட விதிகள் எதனையும் அமல்படுத்தாமல் தனது பொறுப்பை தட்டிக் கழித்தே வருகிறது. குறிப்பாக, 480 நாட்கள் தொடர்ச்சியாக பணிபுரிந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச கூலி சட்டம், பணி நிரந்தரம் உள்ளிட்ட எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இன்றுவரை தொகுப்பூதிய அடிப்படையிலேயே மேற் கண்ட ஊழியர்களின் உழைப்பை சுரண்டி வருவதுடன், கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் விற்பனையை நிறுத்த மாட் டோம் என்று கடை விரித்து காத்துக்கிடக் கிறது.
-ராஜ்வேல்