india

img

ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் - ஆகஸ்ட் 15 முதல் தொடக்கம்

ஃபாஸ்டேக் (FASTag) வருடாந்திர பாஸ் வழங்கும் நடைமுறை ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படுகிறது.
கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமான ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் வசதி, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
வருடாந்திர பாஸ் பெறுவதற்கு ரூ.3,000 கட்டணம் செலுத்த வேண்டும்; இதனை கொண்டு வாகனங்கள், ஆண்டு முழுவதும் அல்லது 200 முறை பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடாந்திர பாஸ், ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra) மொபைல் செயலி மூலமாகவும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் (MoRTH) அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.