தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்குமார், ஜேம்ஸ் பியர்ட் விருதுகளின் நியூயார்க்கின் சிறந்த சமையல் நிபுணருக்கான விருதை வென்றுள்ளார்.
மதுரை அருகே உள்ள அரசம்பட்டி பகுதியை சேர்ந்த விஜய்குமார், நியூயார்க்கில் உள்ள செம்மா என்ற இந்திய உணவகத்தில் சமையல் நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சமையல் துறையில் அமெரிக்காவின் உயரிய விருதாக கருதப்படும் ஜேம்ஸ் பியர்ட் விருதுகளில், நியூயார்க்கின் சிறந்த சமையல் நிபுணருக்கான விருதை விஜய்குமார் வென்றுள்ளார்.
ஜேம்ஸ் பியர்ட் விருது, சமையல் துறையின் ஆஸ்கார் விருதாக கருதப்படுகின்றது. சிறந்த சமையல் நிபுணருக்கான இவ்விருதுக்கு பரிந்துறைக்கப்பட்ட முதல் முறையிலேயே, விஜய்குமார் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.