tamilnadu

img

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை

ஏப்ரல் மாசம் 2010 என் வீட்டுக்காரரு கேன்சர் நோயால்பாதிக்கப்பட்டு கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில சேர்த்தோம். பலரும் உதவி செஞ்சாங்க. அப்ப எம்பியா இருந்த நடராஜன் பிரதமரின் நிவாரண நிதியிலேர்ந்து நாப்பதாயிரம் ரூபா வாங்கி கொடுத்தாங்க. நாங்க யாரு என்னன்னு அவரு பாக்கல. ஏழையா இருந்தது தான் ஒரே தகுதி. கடன்பட்டு, வீட்டுல பாதிய வித்து படாத பாடெல்லாம் பட்டும் அவர காப்பாத்த முடியல ஒரு வருஷத்தில இறந்துட்டாரு. சிங்காநல்லூர் ஜெயா நகரில் வசிக்கும் கே.நாகமணி தனது கணவர் குமாரசாமியை காப்பாற்ற பணத்துக்காக அலைமோதிய துயரம் நிறைந்த நாட்களை நினைவுகூர்ந்து கூறிய வார்த்தைகள் அவை. இப்படி தனது 5 ஆண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர்பொறுப்பை ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தியுள்ளார் பி.ஆர். நடராஜன். மொத்தம் 141 பேருக்கு ரூ.85 லட்சம் மருத்துவ உதவியை பெற்றுத் தந்துள்ளார்.