கோவை, ஜூலை 30- சர்வதேச புலிகள் தினத்தையொட்டி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோவை - மேட்டுப்பாளையம் சாலை யில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவ லகத்தில் சர்வதேச புலிகள் தினம் கொண் டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல், எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாண வியர்கள் கலந்து கொண்ட பேரணி நடை பெற்றது. இதில் தங்களது முகங்களில் புலி போன்று வண்ணங்களால் வரைந்து, புலிகள் போன்று உடையணிந்து கலந்து கொண்டனர். வனத்துறை அலுவலகத் தில் தொடங்கிய பேரணி, மேட்டுப் பாளையம் சாலை வழியாக ஊர்வல மாக சென்று மீண்டும் மாவட்ட வனத்துறை அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வ லத்தில் புலிகள் பற்றிய விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை மாணவ மாண வியர் ஏந்தி சென்றனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சி யர் இரா.ரவிக்குமார் தலைமையில் திங்க ளன்று சர்வதேச புலிகள் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பொள் ளாச்சி வனத்துறை வனச்சரகர் காசிலிங் கம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து மற்றும் மாணவ, மாணவிகள் 500 க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.