what-they-told

img

இன்று சர்வதேச புலிகள் தினம் :ஜூலை 29

இன்று சர்வதேச புலிகள் தினம்.தொடக்கத்தில் புலி இந்தியாவின் தேசிய விலங்காக இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் இந்தியாவின் தேசிய விலங்காக ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு ஆசிய சிங்கத்தையே அறிவித்தது.

ஆனால், 1973இல் இந்திய வனவுயிர் வாரியம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்தது. அதன் காரணம் சிங்கம் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே இருந்தது. புலிகள் நாடு முழுவதும் காடுகளில் பரவி வாழ்கின்றன.

2014ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் 22 மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் 2,226 புலிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு முன்பு 2010இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையான 1,706ஐ விடவும் இது அதிகம்.

2006இல் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. தற்போது நடந்துவரும் 2018ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகள் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.