tamilnadu

img

அவிநாசியில் அஞ்சல் ஊழியர்களுக்கு இலவச பயிற்சி

 அவிநாசி, மே 5-அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் அவிநாசியில் அஞ்சல் ஊழியர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்ஞாயிறன்று நடைபெற்றது.தபால் துறையில் பணியாற்றக் கூடிய ஊரக அஞ்சல் ஊழியர்களுக்கான நேரடி எழுத்தாளர் பதவிக்காக தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் பங்கு பெறுபவர்களுக்குஇலவச பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் ஞாயிறன்று காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளை அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் திருப்பூர் கோட்டம் சார்பில் நடத்துகின்றன. திருப்பூர் கோட்டத்தில் தாராபுரம், அவிநாசி ஆகிய பகுதிகளில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அவிநாசியில் இலவச பயிற்சி வகுப்புகளில் அஞ்சல் ஊழியர் சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வன், தர்மலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.