கோவை: இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 28 இலட்சம் வரை பணம் பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்ட நபர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த உத்திரபிரதேச மாநில பொறுப்பாளர் கோவையில் கைது செய்யப்பட்டனர். கோவை மற்றும் கேரளா பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் இரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக சுமார் 28 இலட்சம் வரை பணம் பெற்று கொண்டு மத்திய இரயில்வே துறையில் பணிக்கு சேரும் முன் பயிற்சி அளிக்க படும் என்றும் அதற்கு பயிற்சிக் கால ஊதியம் உண்டு எனவும் தினமும் மத்திய இரயில்வே அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று வெளியே அமர செய்து இன்று நாளை என ஒரு மாதமாக ஏமாற்றி உள்ளான். இதில் ஒருவர் கேள்வி கேட்கவே அவருக்கு மட்டும் ஒரு மாத பயிற்சி கால சம்பளம் என இவரது ( ஏமாற்றுக்காரன்) வங்கி கணக்கிலிருந்தே imps அனுப்பியுள்ளார். இதில் சந்தேகமடைந்து பணம் கொடுத்தவர்கள் அந்த நபரின் ஆதார், கைபேசி போன்றவைகளை பரிசோதனை செய்ததில் அனைத்தும் போலி என தெரியவந்தது. இதனையடுத்து லாவகமாக பேசி கோவையில் உள்ள தனியார் ஒட்டலுக்கு வரவழைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். குற்றவாளியுடன் துணையாக உத்திரபிரதேசத்தின் பாஜக மாநில பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டு தற்போது பந்தய சாலை காவல் நிலையத்தில் உள்ளனர்.