tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உறுதி செய்க

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.1- குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூ தியர் சங்கம் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை  ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன் வாடி, கிராம ஊழியர்கள் உள் ளிட்ட குறைந்தபட்ச ஊதியம் பெறாத அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்கு வதுபோல் மாநில அரசு ஊழியர் களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூ தியம்,மருத்துவப் படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10  அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் ஏ.மணி தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் கே. செளந்தரம், கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச் சாமி, மாவட்ட நிர்வாகிகள் ஜி. திருவேங்கடம், கே.குப்புசாமி, ஆர்.சுந்தரமூர்த்தி, பி.முனிராஜ், மோகன்ராஜ், பாபு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதேபோல் அரூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டத்தலைவர் எம்.பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட துணைத்தலைவர் கே.துரை, மாவட்ட நிர்வாகிகள் எம்.கோபால், கே.சிவகிரி, கே. ராமானுஜம், முடிமன்னன், கே. ஜெயராமன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.                                  

சேலம்

அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநில செயலாளர் முருகேசன், மாவட்ட செயலாளர் சுப்பிர மணியம், அரசு ஊழியர் சங்க  மாவட்ட தலைவர் சி.முருகப் பெருமாள்  உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். சூரமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.குப்புசாமி, ஆர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமை வகிகத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து  கொண்டனர். மேலும் ஆட்டை யாம்பட்டி, வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம்,  ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி,  எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் ஆகிய  பகுதிகளில் ஓய்வூதியர் சங்கத் தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

நாமக்கல் 

மத்திய, மாநில அரசு மற்றும்  பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங் களின் ஒருங்கிணைப்புக்குழு  சார்பில் நாமக்கல் பூங்கா சாலை  அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.      ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கி ணைப்புக்குழு தலைவர் எம்.காளியப்பன் தலைமை வகித் தார். இதில் ஏஐபிஆர்பிஏ மாநில  உதவிச் செயலாளர் பி.கே.ராம சாமி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க மாநில துணைச் செய லாளர் ப.ராமசாமி, டிஎன்ஜிபிஏ  மாவட்டத் தலைவர் இளங் கோவன், அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பு துணை செயலாளர் பழனிவேல், மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொருளாளர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். நிறைவாக டிஎன்ஜிபிஏ மாவட்டச் செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார். இதில் ஏராள மான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.