மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை,ஆக.12- கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் போதிய பாதுகாப்பு ஏற்பாடு களை செய்து, கல்வி நிலையங்களை திறக்க வேண்டும். 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 30 கோடி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை ஒன்றிய அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும் . சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு மாவட்ட செயலாளர் வேல் தேவா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மாநில துணைத்தலைவர் எம்.கண்ணன், மாவட்ட தலைவர் பாலா ஆகியோர் பங்கேற்றனர். ராசிபுரம் நகரத்தில் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர். கடலூர் நகரத்தில் மாவட்ட துணைச் செயலாளர் லெனின், மாநிலத் துணைச் செயலாளர் பிரகாஷ், திருவாரூரில் சந்தோஷ் ,சுர்ஜித், புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட செய லாளர் ஜனார்த்தன், மாவட்டத் தலைவர் சந்தோஷ், தஞ்சை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் அரவிந்தசாமி, விருதுநகரில் மாவட்ட தலைவர் சமையன், மாவட்ட செய லாளர் மாடசாமி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.