tamilnadu

img

ஊரக வேலையளிப்பு திட்ட வேலை நாட்களை அதிகரித்திடுக

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

நாமக்கல்,பிப்.27-  தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ்  250 வேலைநாட்களாக அதிகரிக்க வலியுறுத்தி விவசாய  தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளியம்பாளையத்தில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்திற் குட்பட்ட வெள்ளியம்பாளையத்தில் அகில இந்திய விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு  கிளை தலைவர் வஜ்ராபி தலைமை வகித்தார்.  கிளை பொருளாளர் முஸ்தபா, கிளை செயலாளர் அமீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர் களுக்கு  வருடத்திற்கு 250 நாட்களுக்கு  வேலை வழங்க  வேண்டும்.  பீடித் தொழிலாளர்களுக்கு  தினக்கூலியாக   ரூ.500 வழங்கிட வேண்டும். மத்திய அரசின் மக்கள்  விரோத பட்ஜெட்டை கண்டித்தும், குடியுரிமை  சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.  அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த  வேண்டுமென என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.  இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி, மாவட்ட செயலாளர் வி.பி. சபாபதி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சம்பூர்ணம் மற்றும் சலீம் அலி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.