நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், திருச்செங்கோடு அருகே மோளிப்பள்ளி கிராமம் அருந்ததியர் தெருவில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஊர் பொதுக் கிணறு உள்ளது. அவை தற்போது சிதலமைடைந்து உள்ளது. கிணறு அருகில் குழந்தைகள் விளையாடுகின்றனர். எனவே கிணற்றை உடனடியாக பராமரிப்பு செய்ய வேண்டியும், கிணற்றை தூர் வார வேண்டியும், விபத்து ஏதேனும் ஏற்படாமல் இருக்க கிணறு மீது கம்பி வலை அமைக்க வேண்டியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.