நாமக்கல், மே 8-சிஐடியு தொழிற் சங்க தலைவரான தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் 32 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு புதனன்றுபல்வேறு இடங்களில் ரத்ததானமுகாம் நடைபெற்றது.சிஐடியு நாமக்கல் மாவட்ட குழுவின் சார்பில் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு மருத்துவர் அசோக்குமார் சான்றிதழ் வழங்கினார். இதில், மாவட்டதலைவர் பி.சிங்காரம், மாவட்டஉதவிச் செயலாளர் கு.சிவராஜ், அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் எல்.ஜெயக்கொடி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ப.ராமசாமி, மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க உதவிச் செயலாளர் சு.சுரேஷ், சிஐடியு போக்குவரத்து கழக செயலாளர் வி.செந்தில்குமார், ரத்தபரிசோதகர் ஆர்.ஸ்ரீதேவி, செவிலியர்கள் டி.புவனேஸ்வரி, பி.உமாமகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
லைவர் சிங்காரவேலு தலைமையில் சிஐடியு தொழிற் சங்க தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு நிறைவுவிழா மற்றும் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் 53-ஆவது அமைப்பு தினத்தையெட்டி தருமபுரி சிஐடியு அலுவலகம் அருகே சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. சங்க மாநில செயலாளர் ஜி.நாகராஜன் கொடியேற்றிவைத்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் சரவணன், சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் ரங்கநாதன், மாவட்ட துணைத் தலைவர் பி.ஆறுமுகம் மற்றும் ரத்தவங்கி அலுவலர்கள் மருத்துவர்கள் சந்திரசேகர், அன்புமதி, செவிலியர்கள், ஊழியர்கள்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ரத்தம் வழங்கியோருக்குசான்றிதழ் வழங்கப்பட்டது.
ஈரோடு
சிஐடியு ஈரோடு மாவட்டக்குழுசார்பில் ஈரோடு அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எச்.ஸ்ரீராம், மாவட்டச்செயலாளர் எஸ்.சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ரகுராமன், நிர்வாகிகள் சி.ஜோதிமணி, தி.ஜான்சன் கெனடி, பொன்.பாரதி, பி.கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளானோர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.இதே போல், கோபி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் கே.மாரப்பன் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், குடிநீர் வடிகால் வாரியத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.சி.பிரகாசம், மத்திய மின் ஊழியர் அமைப்பின் திட்ட செயலாளர் பாண்டியன், சிபிஎம் கோபி தாலுகா செயலாளர் கெம்பராஜ், வி.சி.நந்தகுமார், கே.வெங்கிடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.