tamilnadu

img

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, செப்.7- மின்வாரியத்தில் உள்ள 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என  வலியுறுத்தி  சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவையில் சனியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கேங்மேன் என்கிற மோசடி யான பதவியை ரத்து செய்து கள உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். களப்பிரிவு மற்றும் கணக்கீட்டு பிரிவுகளில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியி டங்களை நிரப்ப வேண்டும். இப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழி யர்களை அடையாளம் கண்டு  நிரப்பிட வேண்டும். தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும். 2003க்கு பின்பு பணியில் சேர்ந்தவர் களுக்கு பழைய பென்சன் திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். வாரியம் அறிவித்தபடி ஐடிஐ படித்த 2900 பேரை கள உதவி யாளர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை குழுவை உடனடி யாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சனியன்று சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோவை  டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலக வாயிலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் ஆர்.செபாஸ்டி யன் தலைமை தாங்கினார். கோரிக் கைகளை விளக்கி நிர்வாகிகள் பி. காளிமுத்து, எம்.மணிகண்டன், எம். தண்டபாணி ஆகியோர் உரையாற் றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில செயலாளர் வி.மதுசூதனன் சிறப்புரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மின் ஊழியர்கள் பங்கேற்று கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங் களை எழுப்பினர். முடிவில் டி.மணி கண்டன் நன்றி கூறினார்.