tamilnadu

img

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துக சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.20- மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியு றுத்தி  சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பினர் வியாழனன்று தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலை வர் டி.லெனின் மகேந்திரன் தலைமை வகித் தார். இதில், மின்வாரியத்தில் பணிபுரியும் அனைத்து பகுதி தொழிலாளர்களையும் அடையாளம் கண்டு ரூ.380 ஐ தினக்கூலி யாக வாரியமே வழங்கி அவர்களை  நிரந் தரப்படுத்தவேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப செட்யுல்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழி லாளர்களுக்கு விபத்து ஏற்படும் பொழுது  அதற்கான மருத்துவ செலவை மின் வாரியமே ஏற்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தப்பட்டது.  இதில், மாநிலதுணைத்தலைவர் பி.ஜீவா, பொருளாளர் எம்.ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் ஜி.பி.விஜயன், அரூர் கோட்டச் செயலாளர் காளியப்பன், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட திரளான மின்வாரிய தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.