உதகை, அக்.14- பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டு வாடி கிராம மக்கள் பட்டா கேட்டு மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்த நிலை யில், அதிகாரிகளின் உறுதியை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைத் தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாடி கிராமம் அரு கில் உள்ள பட்லர் காலனியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் பல ஆண்டுகளாக வசித்து வரு கிறார்கள். இவர்கள் அனுபவத்தில் உள்ள நிலத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்ற னர். இந்நிலையில் கடந்த அக்.10 ஆம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப் போராட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் ஏசய்யன் தலைமை வகித் தார். ஒருங்கிணைப்பாளர்கள் டி.கே.பிலிப், குமாரன், நடேசன், பாபு ஆகியோர் முன்னிலை வகித் தனர். இப்போராட்டத்தை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்க ரன், விடுதலை சிறுத்தைகள் கட் சியின் மாநில துணைத்தலை வர் ராஜேந்திர பிரபு, மாடு வியாபாரி கள் சங்க தலைவர் அலியார், பொரு ளாளர் வாசு, அதிமுக கிளை செய லாளர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதையடுத்து பந்தலூர் வட் டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள் ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்ப தாகவும், விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கிட அரசுக்கு பரிந் துரை செய்வதாகவும் வட்டாட்சி யர் கிருஷ்ணமூர்த்தி உறுதியளித் தார். இதைத்தொடர்ந்து போராட் டத்தை தற்காலிகமாக ஒத்திவைத் தனர்.