ஸ்டார்ட்அப் இந்தியா தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தொழில் முனைவோர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை, ஜன.16- ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளைக் கடந்த நிலையில் வெறும் எண்ணிக்கையில் பெருமை கொள்வதை விடுத்து அதன் தரம் மற்றும் நிலைத்தன்மை குறித்து நேர்மையான சுய ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் கே.இ.ரகுநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டார்ட்அப்கள் உரு வாக்கியுள்ள வேலைவாய்ப்புகளில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாகவும் நிதி முதலீடுகள் ஒரு சில நகரங்கள் மற்றும் துறைகளில் மட்டுமே குவிந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். மெட்ரோ நகரங்களுக்கு வெளியே போதிய வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு இல்லாத தால் பல நிறுவனங்கள் ஆரம்ப நிலையிலேயே சோர்வடை வதையும் சுட்டிக்காட்டிய அவர் இனிவரும் காலங்களில் எண்ணிக்கையிலிருந்து தரத்திற்கும் மதிப்பீட்டிலிருந்து நிலைத்தன்மைக்கும் மாற்றம் தேவை என்று வலி யுறுத்தியுள்ளார். குறிப்பாக ஸ்டார்ட்அப்களை குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் உற்பத்தித் துறையோடு இணைப்ப தன் மூலமே உண்மையான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் எத்தனை நிறுவனங்கள் நிலைத்து நின்று வேலைவாய்ப்பை உருவாக்குகின்றன என்பதே உண்மையான வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலமானார்
திருவள்ளூர், ஜன.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்ட குழுவின் முன்னாள் உறுப்பினர் விஜயபாஸ்கர் தாயார் முனியம்மாள் (வயது 81), காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தில் முன்னணி ஊழியராக இருந்து பணியாற்றய விஜய பாஸ்கரின் தாயார் முனியம்மாள் வயது மூப்பின் காரண மாக வியாழனன்று காலை காலமானார். அவரின் உட லுக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன், வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.கருணாமூர்த்தி, வட்ட குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், வி.ஜோசப், வி.குப்பன், கிளை செயலாளர்கள் ஏ.கோபால், அ.ரவி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். வெள்ளியன்று மாலை பாதிரிவேடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
டாஸ்மாக் மேலாண் இயக்குநராக டி. கிறிஸ்துராஜ் நியமனம்
சென்னை, ஜன. 16 - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி டி. கிறிஸ்துராஜ் நிய மிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பில் இருந்த எஸ். விசாகன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசு வெளி யிட்டுள்ள மற்றுமொரு அரசாணையின்படி, சுற்றுலா ஆணை யராகவும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் ஜே. இன்னசென்ட் திவ்யா பொறுப்பேற்கிறார்.
தொழிலாளி அடித்து கொலை: இருவர் கைது
திருப்பத்தூர், ஜன.16- திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்ற கூலித் தொழிலாளி காணிக்கைராஜை, தகராறைத் தடுத்ததற்காக முரளி மற்றும் குமார் ஆகிய இருவர் சரமாரி யாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இத்தாக்குதலை நேரில் பார்த்த இளைஞர்களை மிரட்டி காணிக்கைராஜ் குடி போதையில் விழுந்து விட்டதாக நாடகமாடச் செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இறந்த பிறகு உண்மை தெரிய வந்தது. இது குறித்து காணிக்கைராஜின் மனைவி லில்லி அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய திருப்பத்தூர் கிராமிய போலீசார், கொலைக் குற்றத்திற்காக முரளி மற்றும் குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்
சென்னை, ஜன.16- பண்டிகை விடுமுறை நெரிசலைக் குறைக்க ஜனவரி 18-ல் நாகர்கோவி லிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஐஆர்சிடிசி தளத்தில் ‘Master List’ மற்றும் ‘e-Wallet’ வசதிகளைப் பயன்படுத்தி பயணி கள் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள லாம் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.