tamilnadu

img

பூட்டை கிராமத்தில் திறக்கப்படுமா அங்கன்வாடி கட்டிடம்?  

பூட்டை கிராமத்தில் திறக்கப்படுமா அங்கன்வாடி கட்டிடம்?  

கள்ளக்குறிச்சி, ஜன.22 - சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூட்டை ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டிடப் பணிகள் நிறைவடைந்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. கட்டிடம் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி சிறுவர், சிறுமிகள் இன்னமும் வாடகை வீட்டில் அங்கன்வாடி கல்வி பயில வேண்டிய அவல நிலை தொடர்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத இடத்தில் குழந்தைகள் கல்வி கற்பது பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துவதாகப் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பொது நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றித் தேங்கிக் கிடப்பது அரசின் அலட்சியத்தைக் காட்டுவதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாகத் திறந்து, குழந்தைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.