கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி
பிரதமரின் வரவேற்பு விழாவிலிருந்து திருவனந்தபுரம் மேயரைப் புறக்கணித்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது அந்த நகரத்தில் வசிக்கும் மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் ஆகும்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களை அமெரிக்காவின் 50% வரி விதிப்பு, நிலையற்ற தன்மை பெரிதும் பாதிக்கிறது. அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு மோடி இதுவரை எந்த தீர்வு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 4.5 கோடி வேலை இழப்பு, லட்சக்கணக்கான தொழில்கள் பாதிப்பு ஏற்பட்டும் பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை.
குஜராத் ஆம் ஆத்மி தலைவர் இசுதான் காத்வி
மதுபான கொள்கை வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. நீதிமன்றம் அவரை நேர்மையானவர் என்று உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்காக பதவியில் இருந்த ஒரு முதலமைச்சரை (கெஜ்ரிவால்) பொய்க்குற்றச்சாட்டுடன், பாஜக குறிவைத்து சிறையில் அடைத்தது என்பது அம்பலமாகியுள்ளது.
சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்
“எனக்கு பால் தாக்கரே ஒரு உத்வேகத்தின் ஊற்று” என்று கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். ஆனால் தாக்கரே கட்டி எழுப்பிய கட்சியையே மோடி உடைத்துள்ளார். தன்னை இக்கட்டான நெருக்கடி நேரத்தில் காப்பாற்றிய அதே குடும்பத்தின் முதுகில் மோடி குத்திவிட்டார். ஆனால் மோடி எல்லாவற்றையும் சமாளிக்க முயற்சி செய்து வருகிறார்.
