‘கேரள ஸ்டோரி’ வலைத்தளம் தொடக்கம் உண்மைகளைப் பரப்புவது காலத்தின் தேவை : எம்.ஏ.பேபி அறைகூவல்
திருவனந்தபுரம் கேரள தலைநகர் திருவனந்த புரத்தில் ‘தி ரியல் கேரள ஸ்டோரி’ பிரச்சாரத்தையும், ‘கேரள ஸ்டோரி’ வலைத்தளத்தையும் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி பேசுகை யில், “பொய்யான கதைகள் புனையப்பட்டு பரப்பப்படும் சூழ்நிலையில், இந்த பிரச்சா ரத்தின் முக்கிய நோக்கம் உண்மைகளை மக்களிடம் கொண்டு செல்வதாகும். அதாவது கேரளத்தைக் குறித்து திரித்துக் கூறும் வெறுப்புப் பிரச்சாரங்களுக்கு எதி ராக உண்மைகளைப் பரப்புவது காலத்தின் தேவை ஆகும். பெரும்பாலும், உண்மையை பரப்புவதில் பெரிய ஆர்வம் காட்டப்படுவ தில்லை” என அவர் குற்றம்சாட்டினார். இந்நிகழ்வில் சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ எம்.வி. நிகேஷ் குமாரும் பங்கேற்றார். பிரச்சாரத்தின் நோக்கம் ‘கேரள ஸ்டோரி’ என்ற புதிய பிரச்சாரம் கேரளத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது. கேரளத்தை அவதூறு செய்யும் வகையில் உண்மைகளுக்கு எதி ராக வெறுப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்ட ‘கேரளா ஸ்டோரி’ படத் திற்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பிரச்சா ரம் நடத்தப்படுகிறது. கேரள வாழ்க்கையின் சிறப்பு அம்சங்களான முன்னேற்றம், அக்கறை, ஒற்றுமை ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களை பரப்புதல் ; கடந்த 10 ஆண்டுகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு; நலத்திட்டங்கள் ஓய்வூதியம், லைப் (வீடு கட்டும்) திட்டம் ; வெள்ளத்தில் இருந்து தப்பிப்பிழைத்தது முதல் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம்; கேர ளத்தின் ஒற்றுமை மற்றும் மதச்சார்பற்ற தன்மை; கடந்த பத்து ஆண்டுகளில் கிப்பி (KIIFB) மூலம் மாநிலத்தில் செயல்படுத்தப் பட்ட 1200க்கும் மேற்பட்ட திட்டங்களின் மாவட்ட வாரியான கணக்குகள் மற்றும் விவ ரங்கள் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும். கேரளத்திற்கு எதிராக பரப்பப் படும் பொய்ப் பிரச்சாரத்தை உண்மைகளு டன் எதிர்கொள்ள ஒவ்வொரு மலையாளி யையும் தயார்ப்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
